Sunday, August 17, 2014

பாகற்காய் ஜூஸ் - BITTER GOURD JUICE

ஹசனாஸ் (மாமியார் பெயர்) பாகற்காய் ஜூஸ்


தேவையானவை:


பாகற்காய் – ஒரு விரல் நீள துண்டு
மிளகு – 4
சீரகம் – கால் தேக்கரண்டி
உப்பு – சிறிது
லெமன் ஜூஸ் – அரை ஸ்பூன்


செய்முறை: பாகற்காயை துண்டுகளாக நறுக்கி அத்துடன் மிளகு,சீரகம்,உப்பு சேர்த்து மிக்சியில் தேவைக்கு தண்ணீர் ஊற்றி (அரை டம்ளர்) அடிக்கவும். நல்ல நுரை பொங்க அடித்து அதை வடிக்கட்டவும். பிறகு லெமென் பிழிந்து குடிக்கவும். அந்த அளவிற்கு கசப்பு தெரியாது.




குறிப்பு: இன்று என் மாமனார், மாமியாரின் கல்யாண நாள், என்ன கசப்பா ஒரு ஜூஸ் போட்டு இருக்கேன்னு பார்க்க வேண்டாம். மாமனாருக்கு சுகர் அதிகமாகமல், அப்படியே அதிக மானாலும், முன்றே நாளில் சரியான டயட் சமையல் செய்து கரெக்ட் லெவலுக்கு கொண்டு வந்துடுவாங்க எங்க மாமியார். ஆகையால் இப்ப கர்பிணி பெண்கள் முதல் கொண்டு, சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோருக்கும் ஜுரம் தலை வலிப்போல் சர்க்க்ரை வியாதியும் ஒன்றாகிவிட்ட்து, கண்டிப்பா எல்லோருக்கும் இது பயன் படும்.

ஏற்கனவே குறிப்புகளில் சாதரணமான பாகற்காய் ஜூஸ் நான் கொடுத்து இருந்தாலும், இதில் மிளகு சீரகம் சேர்த்து என் மாமியார் செய்வாங்க. 

சரி செய்தாச்சு எப்படி குடிப்பது, இப்போதைக்கு இங்கு யாருக்கும் சர்க்கரை வியாதி இல்லை, எனக்கு நாக்கு கொஞ்சம் நீளம் என்ன செய்யலாம் சரி கால் ஸ்பூன் லெமன் பிழியலாம் என்று பிழிந்தேன் சூப்பர்.

எனக்கு தெரிந்து எல்லோருமே இதை பொதுவாக குடிக்கலாம். பிள்ளைகளுக்கு வாரம் ஒரு நாள் கொடுத்து பழக்கலாம். அவர்களுக்கு கொஞ்சம் தேனும், லெமன் சாறும் கொஞ்சம் கூட சேர்த்து கொள்ளலாம். வயிற்றில் உள்ள பூச்சியும் அழி்யும், குழநைைை்தைக்கும் சின்ன வயதிலேயே பாவக்காய் பழக்க படுத்தின மாதிரியும் இருக்கும்.

பார்க்கவே பச்சை பசேல்லுன்னு நல்ல இருந்த்து, உடனே குடிச்சிட்டு இன்னொரு கிளாசும் தயாரிச்சாச்சு, இது நேத்து கிச்சனுக்காக செய்த ஜூஸ், அப்ப்டியே எல்லோருக்கும் சர்க்கரை வியாதிக்கு அருமையான ஒரு ஜூஸும் கிடைத்து விட்டது.

டிஸ்கி: நான் சொல்வது கேட்டு யாரும் சிரிக்க கூடாது, முதலில் செய்த்து இந்த சுவை எப்படி இருக்கும் என்று மடக் மடக்குன்னு போட்டோ எடுக்காமலே காலையில் குடிச்சிட்டேன். பிறகு ஆஹா போட்டோ எடுக்கலையே என்று மறுபடி செய்து (அதான் நல்ல இருக்கே) எடுத்தேன்.

இந்த பாவக்கான்னே நினைப்பு வருவது, எங்க அப்பா சின்ன வயதில் எல்லோரும் மாதம் ஒரு நாள் பாவக்காய் சாப்பிட்டே ஆகனும். கிட்ட உட்கார்ந்து ஊட்டி விடுவார், கண்ணில் ஆறெடுத்து கஷ்டப்பட்டு முழுங்குவேன்.

நன்றி






No comments:

Post a Comment