Sunday, June 15, 2014

ஹைதராபாத் சிங்கம் அஸதுத்தீன் உவைசியின் கர்ஜனை 11-06-2014

ஹைதராபாத் சிங்கம் அஸதுத்தீன் உவைசியின் கர்ஜனை 11-06-2014

உங்களுக்கு முன்னால் நான் இங்கே 

”எஹ்சான் ஜாப்ரியின் மகனாக நிற்கின்றேன் ,

”இஷ்ரத் ஜஹானின் சகோதரனாக நிற்கின்றேன் , 

“மொஹ்சின் சாதிக் ஷேக்கின் தாய்மாமனாக நிற்கின்றேன் , 

”குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப் பட்டு குரல்கொடுக்க கொடுக்க முடியாதவர்களின் குரலாக நிற்கின்றேன் .... 

அந்த ஆத்மாக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் ...

ஹைதராபாத் சிங்கம் அஸதுத்தீன் உவைசி (AIMIM தலைவர்) அவர்களின் கர்ஜனையும், 
மற்றவைகளின் ஊளையும்.... பாராளுமன்றத்தில் இன்று 11-06-2014
*********************************************************************************
*********************************************************************************
I stand here before you "AS A SON OF EHSAN JAAFRI,

I stand here before you "AS A BROTHER OF ISHRAT JAHAAN,

I stand here before you "AS A UNCLE OF MOHSIN SADIQ,

I stand here before you "AS A VOICE OF THOSE WHO HAS BEEN MADE VOICELESS OF THE GUJRAT GENOCIDE....


I WANT JUSTICE TO BE DONE TO THOSE SOULS...

AIMIM SUPREMO BARRISTER ASADUDDIN OWAISI ROARS IN PARLIAMENT TODAY 11-06-2014


அல்லாஹ் (சுபுஹ்) இவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்...

இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா ?

இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா ?
-பி.ஜே
இஸ்லாம் மார்க்கம் ஜாதிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எந்த ஜாதியில் இருந்தார்களோ அந்த ஜாதியைஇஸ்லாம் ஒழித்து விட்டாலும் வேறு விதமான ஜாதி முறைகள் இஸ்லாத்திலும்உள்ளன என்பதும் மாற்று மதத்தினரின் விமர்சனங்களில் ஒன்றாகும்.
இவ்வாறு விமர்சனம் செய்வதற்கு சில சான்றுகளையும் முன்வைக்கின்றனர்.
மிகவும் பரவலாக அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற ஷியாசன்னி போன்றபிரிவுகளையும் தக்னிலெப்பைராவுத்தர்மரைக்காயர் போன்ற பிரிவுகளையும்ஷாபிஹனபிமாலிகிஹம்பலி அஹ்லே ஹதீஸ் போன்ற பிரிவுகளையும்இவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
உருது பேசும் முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்களின் குடும்பத்தில் பெண் எடுப்பதோகொடுப்பதோ இல்லை என்பதையும் எடுத்துக் காட்டுகின்றனர்.
முஸ்லிம் சமுதாயத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதை நாம் மறுக்கவில்லை.மறுக்கவும் முடியாதுஆனால் இதை ஆதாரமாகக் கொண்டு இஸ்லாத்திலும்ஜாதிகள் இருப்பதாக வாதிடுவதைத் தான் நாம் மறுக்கிறோம்.
இவ்வாறு மறுப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
முதல் காரணம்
முஸ்லிம் சமுதாயத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பது அவர்களதுஅறியாமையினால் அல்லது புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறுகளால்உருவானதாகும்.
இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக உள்ள திருக்குர்ஆனிலும் நபிகள்நாயகம் (ஸல்அவர்களின் போதனைகளிலும் இத்தகைய பிரிவுகள் பற்றிக்குறிப்பிடவில்லை.
நீங்கள் அனைவரும் ஒரு சமுதாயம் தான்
(அல்குர்ஆன் 21:92)
உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து நாம் படைத்தோம்உங்களைக்கிளைகளாக கோத்திரங்களாக நாம் ஆக்கியிருப்பது ஒருவரை ஒருவர்அறிந்து கொள்வதற்கேநிச்சயமாக அல்லாஹ்விடம் சிறந்தவர்அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவரே!
(அல்குர்ஆன் 49:13)
தங்கள் மார்க்கத்தைப் பலவாறாகப் பிரித்து விட்டார்களே அவர்களுடன்(முஹம்மதேஉமக்கு எந்த தொடர்பும் இல்லை.
(அல்குர்ஆன் 6:159)
பலவாறாகப் பிரிந்துவிடக் கூடாது என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதுஎல்லாமக்களுக்கும் மூல பிதா ஒருவர் தான்எல்லா மக்களுக்கும் மூல அன்னையும்ஒருவரே என்று திட்டவட்டமாக இஸ்லாம் பிரகடனம் செய்து விட்டது.
இஸ்லாத்தின் போதனைகளை மறந்து விட்டதன் காரணத்தால் தான் இவ்வாறுபிளவுபட்டு விட்டார்களே தவிர இஸ்லாம் பிளவுபடுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இரண்டாவது காரணம்
ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் ஒருவனுக்குக் கிடைக்கும் தகுதியாகும்ஒருசாதியில் பிறந்தவன் இன்னொரு சாதிக்காரனாக மாறவே முடியாதுஇது தான்சாதிக்குரிய இலக்கணம்.
முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் இந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்படையில்உருவானதன்று.
ஷியாசன்னிஷாபிஹனபிமாலிகிஹம்பலிஅஹ்லே ஹதீஸ் போன்றபிரிவுகள் இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதில் கருத்து வேறுபாடு கொண்டதால்ஏற்பட்ட பிரிவாகும்.
ஷியா பிரிவின் குடும்பத்தில் பிறந்தவன் அவர்களது கொள்கையை நிராகரித்துவிட்டுமற்ற எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்ஷாபி என்பவர்ஹனபி பிரிவில் சேரலாம்ஹனபி என்பவர் ஷாபி பிரிவில் சேரலாம்.
இது பிறப்பின் அடிப்படையில் வருவதன்றுஒருவன் விரும்பித் தேர்வு செய்வதால்ஏற்படுவதுயாரும் எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் எனும்போது இந்தப் பிரிவை சாதியுடன் சேர்ப்பது எந்த வகையிலும் ஏற்புடையதாகாது.
மரைக்காயர்லெப்பைஇராவுத்தர் போன்ற பிரிவுகளும் அக்காலத்தில் அவர்கள்செய்த தொழிலின் அடிப்படையில் உருவானதாகும்.
குதிரையைப் பயிற்றுவிப்பவர் இராவுத்தர் எனப்படுவார்அன்றைய முஸ்லிம்களில்ஒரு பகுதியினர் அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்துகுதிரைகளுக்குப் பயிற்சி அளித்து விற்று வந்தனர்இந்தத் தொழில் காரணமாகஅவர்கள் இராவுத்தர் என்று அழைக்கப்பட்டார்களே தவிர பிறப்பின்அடிப்படையிலோஉயர்வு தாழ்வு கற்பிக்கும் அடிப்படையிலோ இவ்வாறுஅழைக்கப்பட்டதில்லை.
மரக்கலத்தில் சென்று வணிகம் செய்த முஸ்லிம்கள் மரக்கலாயர் என்றுஅழைக்கப்பட்டனர்இதுவே மரைக்காயர் என்று ஆனது.
அரபு நாட்டைத் தாயகமாகக் கொண்ட சிலர் இங்கே வந்து குடியேறினார்கள்.அவர்கள் லெப்பை என்று அழைக்கப்பட்டனர்.
யாரேனும் அழைத்தால்  என்று நாம் மறுமொழி அளிப்போம்அன்றைய அரபுநாட்டில் லப்பைக் என்று மறுமொழி கூறிவந்தனர்இங்கு வந்து குடியேறிய அரபுமுஸ்லிம்களும் அந்த வழக்கப்படி அடிக்கடி லப்பைக் என்று கூறி வந்ததால் அவர்கள்லப்பை என்றே குறிப்பிடப்பட்டனர்உயர்வுதாழ்வு கற்பிப்பதற்காக இவ்வாறுஅழைக்கப்படவில்லை.
எனவே இதையும் காரணமாக வைத்துக் கொண்டு இஸ்லாத்தில் ஜாதிகள் உள்ளனஎனக் கூறுவது ஏற்க முடியாத விமர்சனமாகும்.
மூன்றாவது காரணம்
கொள்கை மற்றும் தொழில் காரணமாக இவ்வாறு பல பெயர்களில் முஸ்லிம்கள்பிரிந்து கிடந்தாலும் இதன் காரணமாக தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை.வேறு பிரிவினரிடம் திருமண சம்பந்தம் கூட செய்து கொள்கின்றனர்.
இதனைச் சாதியாக முஸ்லிம்கள் கருதியிருந்தால் ஒருவர் மற்ற பிரிவில் பெண்எடுக்கவோ கொடுக்கவோ மாட்டார்எனவே இந்தக் காரணத்தினாலும் இஸ்லாத்தில்ஜாதி கிடையாது என அறிந்து கொள்ள முடியும்.
உருதுதமிழ் என்பது போன்ற பிரிவுகளுக்கிடையே சகஜமாகத் திருமணங்கள்நடப்பதில்லை என்பது உண்மை தான்.
இதற்குக் காரணம் சாதி அமைப்பு அல்லதம்பதிகள் தமக்கிடையே நல்லுறவைவளர்த்து இல்லறத்தை இனிதாக்கிட ஒரு மொழியை இருவரும் அறிந்திருப்பதுஅவசியமாகும்.
ஒருவரது மொழி மற்றவருக்குத் தெரியாத நிலையில் அவர்களது இல்லறம்சிறக்கும் எனச் சொல்ல முடியாதுஇது போன்ற காரணங்களுக்காகத் திருமணசம்பந்தத்தைச் சிலர் தவிர்க்கின்றனர்உயர்வு தாழ்வு கற்பிப்பதற்காக இல்லை. 
தமிழ் முஸ்லிம் உயர்ந்தவன் இல்லைஉருது முஸ்லிம் தான் உயர்ந்தவன் என்றஅடிப்படையில் திருமண சம்பந்தத்தைத் தவிர்த்தால் தான் அதைச் சாதியாகக் கருதமுடியும்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தெரியாத சில முஸ்லிம்கள்  தம்மைஉயர்ந்தவர்களாகக் கருதிக் கொண்டு திருமண உறவுகளைத் தவிர்க்கின்றனர்இதற்கும்இஸ்லாத்துக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை.
இது போன்ற பிரிவுகளையும் கூட தவிர்ப்பது இத்தகைய விமர்சனங்களைத்தடுக்கும் என்பதை முஸ்லிம்களும் உணர்ந்து இதைக் கைவிட வேண்டும்.என்பதையும் முஸ்லிம்களுக்கு நாம் அறிவுரையாகக் கூறிக் கொள்கிறோம்.

அவர்கள் கைவிடாவிட்டாலும் அதையும் சாதியாகக் கருதுவது முற்றிலும்தவறாகும்.