Sunday, June 15, 2014

சீனாவை எதிர்ப்பதில் தேசபக்தியை காட்டாத ஹிந்துதுவா!!!

சீனாவை எதிர்ப்பதில் தேசபக்தியை காட்டாத ஹிந்துதுவா!!!
பாகிஸ்தானை எதிர்பதில் மட்டும் தேசபக்தியை காட்டுவதுஏன்?
முஸ்லிம் என்பதாலா???



ஒருவேளை முஸ்லிமை எதிப்பதற்கு பெயர்தான் தேசபக்தியோ???


இந்திய பாக் எல்லை வீரர்கள் சொல்வது என்னவென்றால் .....

---இந்திய ரானுவ வீரர் சதீஷ் செல்லதுரை (



பொதுவாக நான் விடுமுறை வரும்போது, அங்கல்லாம் எப்படி மக்கா பாகிஸ்தான்காரன் நெறைய சேட்டை செய்வானோ? இப்படி நண்பர்களிடம் ஆரம்பிக்கும் கேள்விகள்.... யய்யா அங்க ஒரே சண்டயா இருக்குமோ? என்று கேட்கும் என் கிராமத்து பெரியவங்க வரை அனைவருக்கும் உங்களுக்கும் இந்த பதிவு மூலம் எல்லையில் உள்ள இந்திய பாக் உறவுகள் எப்படின்னு சொல்றேன்..

பஞ்சாப்பில் இந்திய விவசாயிகள் எல்லைப்புறத்தில் உள்ள தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யும் பொழுது அவர்களை கண்காணிப்பதற்கும் பாதுகாக்கவும் நாங்களும் செல்லவேண்டும்.ஜீரோ லைன் என்னும் இந்திய பாக் எல்லையில் ரோந்து வரும் பாக் ரேஞ்சர்கள் எங்களுடன்..என்ன ஜனாப் சௌக்கியமா என்று கை குலுக்கி செல்வார்கள்.(நாளிதழில் வருவது போல பரம எதிரி என்றால் முறைத்து விட்டு போலாமே..)

ஒரு முறை சந்தித்த போது, அதான் நாங்க காவல் காக்கிறோமுல நீங்க ஓய்வு எடுங்கனு சொன்னப்போ சிரித்து வைத்தார்கள்.நமது எல்லைப்பகுதியில் உள்ள இலந்தைபழங்களை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.நாமளும்தான். (காய் விடுறதில்லை பழம் னு சிம்பாலிக்கா சொல்றேனுங்க)

எந்த இடம் என்று நியாபகம் இல்லை.எல்லையில் மிக அருகில் எதிரெதிரே காவல் காக்கும் OP POINT(OBSERVATION POST)அமைந்திருந்தது..நமது POSTடிலும் அங்கேயும் அவரவர் தேசிய கொடி பறக்கும்.(எல்லா OPயிலும் இல்லை) மாலையானால் கொடியை இறக்க வேண்டும்.வீட்டு கவலை,பணி சுமை காரணமாக நாம் மறக்கும் பட்சத்தில் பாக் வீரர்களே விசில் அடித்து நியாபக படுத்துவார்கள்.அந்த OPயில் நான் முன்புறம் காவல் பார்க்க என் பின்னால் (வரும் வழி பின்புறம் என்பதால்) சோதனை செய்ய வரும் அதிகாரிகளின் வண்டிகளை என் முன் புறம் உள்ள பாக் வீரன் எனக்கு முன்னமே விசிலடித்து அறிவித்து விடுவான்.(நண்பேன்டா)

மாதாமாதம் ...இல்லைனா அவசியப்படும் நேரம் FLAG MEETINGனு ஒன்னு நடக்கும்.அதாவது இந்திய பாக் எல்லையில் இரு நாட்டு அதிகாரிங்களும் சந்தித்து சிறு சிறு பிரச்சனைகளை பேசி தீர்த்து கொள்ளலாம்..அப்பவும் பாது காப்புக்கு நாங்க போவோம்.அப்படி போகும்போது பாக் வீரர்களுடன் பேச கூடாது.வணக்கம் வைக்கலாம் புன்சிரிக்கலாம்.பெயரெல்லாம் கேட்டால் சொல்ல கூடாது. அப்படி நடந்த ஒரு சந்திப்பில் பாக் வீரன் என் பெயரை கேட்டு தொலைக்க... நான் சல்மான் கான் என்று சொல்லி விட்டு நமட்டு சிரிப்புடன் அவன் பெயரை கேட்க அவன் சிரிக்காமல் சொன்னான் ஹிரித்திக் ரோஷன் என்று.இருவருமே வாய் விட்டு சிரித்து விட்டோம்.

பண்டிகை நாட்களில்,சுதந்திர தினத்தில் இனிப்பு பகிர்வது சம்பிரதாயமாக இருந்தாலும் நல்லாத்தான் போகுது..ஆனா நாட்டுக்குள்ளே ...???

இப்படில்லாம் நாங்க முறைக்கிறது இல்லை .இது ஒரு சூடேற்றும் நிகழ்வு.

உங்கள் தேசப்பற்றின் அர்த்தம் திசை திருப்பப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா? வாகா எல்லையில் நடக்கும் மக்களை சூடேற்றும் நிகழ்வுக்கும் இந்திய பாக் அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.இங்குதான் ஒட்டு மொத்த ஜனத்தின் தேசப் பற்றும் பொங்கி வழியும்.உங்க நாட்டு பற்றை லஞ்சம் கேட்கும் அதிகாரியிடமோ,ஊழல் செய்யும் ஒரு அரசியல்வாதியிடமோ காட்டினால் சந்தோசம் கொள்வேன்.கொடுப்பவனும் வாங்குபவனும் ஒன்றாக அங்கு கொடியாட்டி கொண்டிருக்கையில் என்னை போல் ஒரு எல்லை காவலன் ரயிலில் இடமில்லாது கழிவறை ஓரம் கழிவிரக்கத்தோடு அமர்ந்திருப்பான். இதுதான் யதார்த்தம்.

குஜராத்,ராஜஸ்தான்,பஞ்சாப்.எல்லை பகுதிகளில் நட்பாகத்தான் இருக்கிறோம். போர் என்று பரபரப்பு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளினால் எங்களின் விடுமுறை நிறுத்தபடுவது பற்றி யாரும் அறிவதில்லை.
சரியாக சொன்னால் நாட்டையே அமெரிக்காவிற்குவிற்று தொலைக்கும் மன்மோகன் அரசை விட,இலங்கைக்கு தமிழ் சொந்தங்களை பந்தியிட்ட இந்திய தமிழ் அரசியல் நாய்களை விட, கூடங்குள அணு உலைகளை விட எல்லையில் எந்த ஆபத்தும் இல்லை.

எனவே நண்பர்களே,ஜம்முவில் சண்டையிடும் இரு நாட்டு வீரர்களும் இட மாற்றுதலாகி வேறு இடங்களுக்கு செல்லும் போது நட்போடுதான் சந்திக்கிறோம்.அனைத்து இடங்களையும் பதட்டமாக்கி ஓட்டு பொறுக்கும் பாரதிய ஜனதா போன்ற கட்சிகளிடமும்,ஊடகங்களிடமும்,அனைத்து அரசியல்வியாதிகளிடமும் மட்டும் கவனமாக இருங்கள்.

டிஸ்கி :உள்ளிருக்கும் துரோகிகளை விட வெளியே உள்ளதாக கூறப்படும் எதிரிகள் தேவலாம் பாஸ்!!

நீங்கள் கேட்கும் கேள்விகள், பின்னூட்டங்கள் இன்னும் இன்னும் என்னை எழுத தூண்டும்.கேளுங்கள்,திட்டுங்கள்,கருத்திடுங்கள்.பகிர்ந்திடுங்கள்.நன்றி.


*******நாட்டையே அமெரிக்காவிற்குவிற்று தொலைக்கும் மன்மோகன் அரசை விட,இலங்கைக்கு தமிழ் சொந்தங்களை பந்தியிட்ட இந்திய தமிழ் அரசியல் நாய்களை விட, கூடங்குள அணு உலைகளை விட எல்லையில் எந்த ஆபத்தும் இல்லை*******

*******அனைத்து இடங்களையும் பதட்டமாக்கி ஓட்டு பொறுக்கும் பாரதிய ஜனதா போன்ற கட்சிகளிடமும், ஊடகங்களிடமும், அனைத்து அரசியல்வியாதிகளிடமும் மட்டும் கவனமாக இருங்கள்*******

No comments:

Post a Comment