السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ
அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு நேற்று (16-07-2014), சகோதரரர் ஹாஜா நஜிமுத்தீன் அவர்கள்களுடைய இல்லத்தில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் வெகு சிறப்பான முறையில் இஃப்தார் விருந்து நடைப்பெற்றது, பிறகு மஃக்ரிப் தொழுகை ஜமாத்தாக நிறைவேற்றப் பட்டது.
அதனைத் தொடர்ந்து ரமழான் நேரத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள் பற்றியும், புறம் பேசுவதால் கிடைக்கக் கூடிய மிகப் பெரும் தண்டனைகள் பற்றியும் ஒரு சிற்றுரை நிகழ்த்தப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சகோதரத்துவத்தை பேனிகாக்கும் வகையில் நாகை மாவட்டம் சிக்கல் மற்றும் பொரவச்சேரியை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் இயக்க பாகுபாடின்றி இணைந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தார்கள்...
சகொதரத்துவத்தை பேனுவதைப் பற்றிய சில திருக்குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழி:
”நிச்சயமாக #முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்” – (திருக்குர்ஆன் 49:10)
”எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.” (திருக்குர்ஆன் 61:4)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4655)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை ‘ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: ஹாகிம் 318
இன்ஷாஅல்லாஹ் நம்மாலும் நிச்சயம் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என சபதம் எடுப்போம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது உள்ளத்தில் உள்ள குரோதங்களை அகற்றி சகோதரத்துவத்தை ஏற்படுத்துவானாக!
ஆமீன்!!!
நிகழ்ச்சியின் போது எடுக்கப் பட்ட படங்கள்:
No comments:
Post a Comment