Monday, July 21, 2014

சோயா பீன்ஸ் குறிப்புகள்

சோயாபீன்ஸ் தோசை

food image
வழங்கியவர் : Ms. Moorthy, USA
தேதி : வெள்ளி, 10/06/2011 - 03:55
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

  • சோயாபீன்ஸ் - 2 கப்
  • பச்சை மிளகாய் - 4
  • இஞ்சி - 1 அங்குல துண்டு
  • வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
  • பொடியாக நறுக்கிய தக்காளி - 1/4 கப்
  • துருவிய காரட் - 1 tbsp
  • துருவிய முள்ளங்கி - 1 tbsp
  • சீரகம் - 1 tsp
  • அரிசி மாவு - 2 tsp
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

  • சோயாபீன்ஸ்சை எட்டு மணி நேரம் ஊறவைத்து மிளகாய் இஞ்சிவுடன் அரைத்துவைக்கவும்.
  • அரைத்த மாவுடன் உப்பு, அரிசி மாவு, சீரகம், வெங்காயம், தக்காளி, காரட் மற்றும் முள்ளங்கி சேர்த்து கரைத்து உடனே தோசையாக வார்த்தெடுக்கவும்.
சோயாபீன்ஸ்சை ஊறவைத்ததோடு மட்டுமல்லாமல் முளைகட்டியபின் அரைத்தால் அதிகப்படியான வைட்டமின் இ நமக்கு கிடைக்கும்.


சோயா வெஜ் குருமா

food image
வழங்கியவர் : N.ஜெயலட்சுமி
தேதி : ஞாயிறு, 31/10/2010 - 11:25
ஆயத்த நேரம் : 10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
பரிமாறும் அளவு : 4 நபர்

  • சோயா பீன்ஸ் – 1 கப்
  • பீன்ஸ் – 5
  • கேரட் – 1
  • உருளைக்கிழங்கு – 1
  • பச்சை பட்டாணி- ¼ கப்
  • பெரிய வெங்காயம் - 1
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் - 2
  • மல்லித்தூள் – 1 ½ டேபிள் ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • பூண்டு – 4
  • இஞ்சி – 1 பெரிய துண்டு
  • தேங்காய் – 2 கீற்று
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • பட்டை – 1 துண்டு
  • லவங்கம் -2
  • ஏலக்காய் - 3
  • கசகசா – 1 டீஸ்பூன்
  • வெள்ளை எள் – 1 டேபிள் ஸ்பூன்
  • கொத்துமல்லைதழை - சிறிது
  • ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு எண்ணெய் - 1 டீஸ்பூன்

  • முதல் நாள் இரவே ஊறவைத்த சோயாபீன்சை குக்கரில் 3 விசில் விட்டு வேகவைக்கவும்.
  • கசகசா, வெள்ளை எள், ஏலக்காயை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.
  • இதனுடன் இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம் சேர்த்து மைய அரைக்கவும்.
  • தக்காளியை தனியாக அரைத்து வைக்கவும்.
  • தேங்காய், சோம்பு சேர்த்து தனியாக அரைத்து வைக்கவும்.
  • காய்களை நீளவாக்கில் அரிந்து வைக்கவும். பீன்சை ஒரு இன்ச் நீளத்துக்கு அரிந்து வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம்,வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து மீண்டும் வதக்கவும்.
  • நன்கு வதங்கி வாசனை வந்தபின் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளைப்போட்டு கிளறவும்.
  • அரைத்த தக்காளி கலவையை இதனுடன் சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி பச்சை வாசனை போனதும் 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவைக்கவும்.
  • 10 நிமிடம் கழித்து காய் வெந்தவுடன், தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்த விழுதுடன் மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கிளறி மூடி போட்டு வைக்கவும்.
  • 2 நிமிடம் கழித்து கொத்துமல்லி தழை போட்டு இறக்கவும்.
  • சுவையான சோயா வெஜ் குருமா தயார்
ஹெல்த்தியான பேலன்சுடு குருமா இது. சோயாபின்ஸ் பிடிக்காதவர்களும் விரும்பி உண்பர். ( சோயா வேகவைத்த பிறகும் கிரன்சியாகதான் இருக்கும் )


சோயா 65

food image
வழங்கியவர் : Ms. Moorthy, USA
தேதி : Sat, 30/10/2010 - 05:08
ஆயத்த நேரம் : 15 நிமிடம்
சமைக்கும் நேரம் : 5 நிமிடம்
பரிமாறும் அளவு :

  • சோயா சன்க்ஸ் - 2 கப்
  • சிக்கன் 65 மசாலா பொடி - 2 tsp
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 1 tbsp
  • கொத்தமல்லி - ஒரு கைபுடி

  • சோயாவை கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • ஊறியபின் தண்ணீரை பிழிந்து விட்டு தனியே எடுத்து வைக்கவும்.
  • எண்ணெய் சூடானதும் சோயாவை சேர்த்து மசாலா தூளை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சுடு நீரில் ஊற வைப்பதால் தனியே வேக வைக்க தேவை இல்லை. சோயாவில் அதிக அளவில் புரதம் இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லது. அசைவம் சாபிடாதவர்கள் இதை நிறைய சேர்த்து கொள்ளலாம். சிக்கன் 65 மசாலா பிடிக்காதவர்கள், சிறிது வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து செய்து சாப்பிடலாம்.

சோயாபீன் மில்க்

food image
வழங்கியவர் : Mahalakshmiprag...
தேதி : வெள்ளி, 08/05/2009 - 08:57
ஆயத்த நேரம் : 5 hrs
சமைக்கும் நேரம் : 10 min
பரிமாறும் அளவு : 3

  • சோயா பீன்ஸ் - 3/4 கப் (வெள்ளை கலர்)
  • சீனி - தேவையான அளவு

  • சோயா பீன்ஸை முந்தினம் இரவே ஊறவைக்க வேண்டும். காலையில் அந்த பீன்ஸை கழுவி தண்ணீரை வடித்து விட்டு வேறு பாத்திரத்தில் குறைவான தண்ணீரில் பீன்ஸை வேகவைக்க வேண்டும்.
  • பீன்ஸ் வெந்ததும் மிக்ஸியில் எல்லாவற்றையும் போட்டு ஒரு முறை கிரைண்ட் பண்ணவும், பிறகு தேவையான அளவு சீனி சேர்த்து பருக வேண்டும்.
  • குளிரவைத்து குடிக்க விரும்புவர்கள் ஃப்ரிஜ்ஜில் வைத்து பருகவும்.
சோயா பால் மிகவும் உடலுக்கு நல்லது, இது எலும்பை நல்ல பலப்படுத்தும், சோயா புரதச்சத்து நிறைந்தது அதனால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. சோயாவில் பல வகை உள்ளது. சோயாவில் இருந்து சாஸ், டோபு தயாரிக்கின்றனர் மற்றும் சிலவகை சோயா மருத்துவரீதியாகவும் பயன்படுத்துகின்றனர். சோயா பாலை சூடாக குடிப்பது நல்லது, குளிர வைத்து குடிப்பதலாம் சளி பிடிக்கும் வாய்ப்புள்ளது. சோயா பீன்ஸ் பார்க்க வெள்ளைகலரில் பட்டாணிப்போல் உருண்டையாக இருக்கும் ஊறவைத்தப்பின் அது நீளவாக்கில் வரும், சோயாவில் பல வகை உள்ளது, ஆனால் பால் செய்ய இந்த வெள்ளைகலர் மிகவும் நல்லது.

சோயா வெஜ் மிக்ஸ் சுண்டல்

food image
வழங்கியவர் : Mahalakshmiprag...
தேதி : திங்கள், 16/02/2009 - 21:40
ஆயத்த நேரம் : 8 hrs
சமைக்கும் நேரம் : 30 min
பரிமாறும் அளவு :

  • சோயா பீன்ஸ் - 1 கப்
  • கேரட் - 1/2 கப் (மிகப்பொடியாக நறுக்கியது)
  • குடைமிளகாய் - 1/2 கப் (மிகப்பொடியாக நறுக்கியது) (எந்த கலர் என்றாலும் சரி)
  • தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1/4 டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 2 கீற்று
  • பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கேற்ப

  • சோயா பீன்ஸை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் நன்றாக கழுவி குக்கரில் உப்பு போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து குடைமிளகாய், கேரட் போட்டு வதக்கி, பின்னர் வேகவைத்துள்ள சோயா பீன்ஸ் சேர்க்கவும்.
  • பின்னர் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

சோயா சோலே

food image
வழங்கியவர் : senthamizh selvi
தேதி : ஞாயிறு, 11/11/2007 - 19:02
ஆயத்த நேரம் : 2 மணி நேரம்
சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
பரிமாறும் அளவு : 2 நபர்களுக்கு

  • உருண்டைக்கு:
  • ============
  • வெள்ளை சோயா - 1/2 கப்,
  • உளுத்தம் பருப்பு - 1/4 கப்,
  • துவரம் பருப்பு - 1/4 கப்,
  • பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),
  • பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது),
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி.
  • குழம்புக்கு:
  • =========
  • சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி,
  • தக்காளி - 4,
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
  • மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
  • தனியாத்தூள் - 2 தேக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு.
  • தாளிக்க:
  • =======
  • கடுகு - 1/2 தேக்கரண்டி,
  • வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி,
  • பட்டை - சிறிது,
  • கிராம்பு - 2,
  • அன்னாசிப்பூ - 1,
  • கறிவேப்பிலை - சிறிது,
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி.

  • உருண்டைக்கு தேவையான எல்லா பருப்புகளையும் 2 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து கெட்டியாக, கரகரப்பாக அரைக்கவும்.
  • மீதி எல்லாவற்றையும் சேர்த்து சின்ன சின்ன உருண்டையாக்கி ஆவியில் வேக வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, அன்னாசிப்பூ, வெந்தயம்,கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்கு வெந்து கிரேவியானதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு உருண்டைகளை போடவும்.
  • குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

சோயா குழம்பு

வழங்கியவர் : uk5mca
தேதி : திங்கள், 16/08/2010 - 17:00
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
3.375
8 votes
Your rating: None


  • முளைகட்டிய சோயா - ஒரு கப் (அளவிற்கு ஏற்ப கூட்டலாம்)
  • வெங்காயம் - ஒன்று (அளவிற்கு ஏற்ப கூட்டலாம்)
  • பூண்டு - 4 பல்
  • தக்காளி - ஒன்று
  • மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு ஏற்ப
  • தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி (அளவிற்கு ஏற்ப கூட்டலாம்)
  • கடுகு, வெந்தயம், சீரகம் - தாளிக்க
  • புளி - தேவையான அளவு
  • எண்ணெய் - தாளிக்க
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி



வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, தேங்காய் மூன்றையும் தனித்தனியாக அரைத்து வைக்கவும்.




சோயாவை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.



வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.



அதில் அரைத்த வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.





பின்பு வேக வைத்த சோயாவையும் சேர்த்து வதக்கவும்.



பிறகு கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.




மிளகாய் தூள் வாசம் போனதும், அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.



இறுதியாக ஆல் பர்பஸ் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். லேசாக அடிபிடிக்கும் அதனால் நன்கு கிளறவும்.




கெட்டியாக ஆனதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.



சுவையான முளைக்கட்டிய சோயா குழம்பு ரெடி. வெறும் சாதத்தில் கூட நெய் விட்டு சாப்பிடலாம். புலாவ், இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி, ஊத்தப்பம் ஆகியவற்றுக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment