இந்தியா என்றால் இந்து நாடா ? இந்தியா முழுவதும் ஹிந்துக்கள் தான் வாழ்ந்து வந்தார்களா ?
இந்தியா என்றாலே ஹிந்து என்றும் இந்தியா முழுவதும் ஹிந்துக்கள் தான் வாழ்ந்து வந்தார்கள் என்றும் வாதிடும் அறிவீனர்கள் மிக எளிதாக ஒரு அடிப்படை உண்மையை வேண்டும் என்றே மறைத்து மறுத்து வருகிறார்கள்
ஹிந்துக்கள் ஒரு போதும் ஒரு மதமாக இன்னும் தெளிவாக சொல்லப்போனால் ஒரே மதமாக அதிலும் ஒரே ஜாதியாக இருந்ததே இல்லை.
பலவிதமான வேறுபாடுகளுடன் தனது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தனது கற்பனைக்கு எட்டிய முட்டும் கற்பனை செய்து தனி வடிவ கடவுள்களை வகுத்து அதற்க்கு வெவேறு பெயர்கள் இட்டு தனித்தனி மதங்களாக பிரிந்து கிடந்த இவர்கள் கால மாற்றத்தில் சாமி சிலை கோவில் வடிவம் என்ற சிலை வணக்கம் மற்றும் கட்டிட அடிப்படையில் மட்டுமே ஒற்றுமை கண்டு அதுவரையிலும் பிரமா, விஷ்ணு, சிவன் என்று அடித்து கொலை செய்து கொண்டிருந்தவர்கள் ஒரு காலக்கட்டத்துக்கு பின் மூன்று சக்தியும் ஒன்று தான் என்று அறிமுகப் படுத்தி இனி நமக்குள் சண்டை வேண்டாம் என்று தமக்குள் சரி சமம் செய்து கொண்டாலும் இதுவரையிலும் இவர்களில் யார் சிறந்தவர் என்ற தெளிவற்ற குழப்பமும் இவர்கள் மூவரையும் யார் முதலில் முதலாவதாக படைத்தார்கள் என்ற கருத்து வேறுபாடு இன்றளவும் நீடித்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த பவர் ஷேரிங் ஸ்ட்ரகுளில் நசுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு நிறத்தாலும் மொழியாலும் வாழும் நிலப்பரபபாலும் சமுதாய நெருக்கடியாலும் திணிக்கப்பட்ட தொழிலை வயிற்று பசிக்காக செய்த ஒரு சமுதாயத்தை ஒதுக்கி பின்னுக்கு தள்ளி ஆடையை கூட உருவிக்கொண்டு நீ இன்னவன் எனவே நீ கோமணத்தை தான் கட்ட வேண்டும் நீ இன்னவள் எனவே நீ உன் மார்பகத்தை மறைக்க கூடாது என்று மனித உரிமை மீறல் மற்றும் இனகொடுமை செய்த பெருமைக்குரிய ஒரே மதம் இந்த உலகில் இருக்கிறது என்றால் அது தனி பல மதங்களை உள்ளுக்குள் அடக்கி பரிணாம வளர்ச்சி அடைந்த இன்றைய ஹிந்து மதத்தை தான் சொல்லவேண்டும்.
இதன் வேதத்தில் யார் எவர் எவ்வித தரத்திர்க்குரியவர் என்று போதிக்கும் பெருமைக்குரிய வெளிப்பாட்டை தான் நாம் இந்த புகைப்படத்தில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
No comments:
Post a Comment