- பூண்டு தோல் உரித்தது - ஒரு கப் (100 கிராம்)
- பால் - ஒரு கப்
- பனங்கற்கண்டு - ஒரு தேக்கரண்டி
- பூண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி சிறு தீயில் கொதித்து வற்றவிடவும்.
- வெந்தவுடன் கரண்டியால் மசித்து விட்டு பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்கவும். மசிக்காமல் முழுப்பூண்டாகவும் சாப்பிடலாம். இதை இரவில் சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.
பூண்டு இருதயத்திற்கும், செரிமானத்திற்கும் சிறந்தது. இதை வாயுத்தொல்லை உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டாலே பலன் கிடைக்கும். ஒரு மாதம் சாப்பிட்டால் சுத்தமாக வாயு போய்விடும். மலச்சிக்கல் நீங்கும். இடுப்பு வலி உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து.
வழங்கியவர் : SARASWATHI
No comments:
Post a Comment